சென்னை மெட்ரோ ரயில்களில் அதிக பயணம் - 30 பயணிகளுக்கு பரிசுப் பொருட்கள்

சென்னை மெட்ரோ ரயில்களில் அதிக பயணம் - 30 பயணிகளுக்கு பரிசுப் பொருட்கள்
Updated on
1 min read

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் செல்லும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், ஒரு மாதத்தில் அதிகபட்சமாக பயணம் செய்த முதல் 10 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள பரிசுப் பொருள் வழங்கப்படுகிறது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மார்க் மெட்ரோ உடன் இணைந்து பரிசுப் பொருட்கள் வழங்குகிறது. நடப்பாண்டில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அதிக அளவில் பயணம் செய்த 30 பயணிகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் திரு.வி.க.பூங்காவில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ( அமைப்புகள் மற்றும் இயக்கம் ) ராஜேஷ் சதுர் வேதி, தலா ரூ.2,000 என மொத்தம் ரூ.60,000 மதிப்புள்ள பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் ( நிதி ) பிரசன்ன குமார் ஆச்சார்யா முன்னிலை வகித்தார். தலைமை பொது மேலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன் ( ரயில் மற்றும் இயக்கம் ), கூடுதல் பொது மேலாளர் எஸ்.சதீஷ் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in