‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் சீரமைக்க புதுவை புதிய பேருந்து நிலையம் இடிக்கும் பணி தொடக்கம்

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் புதுச்சேரி புதிய பேருந்து நிலையம்  கட்டும் பணிக்காக ஏற்கெனவே உள்ள பேருந்து நிலைய கட்டிடம் இடிக்கப்படுகிறது. படம்: எம்.சாம்ராஜ்
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிக்காக ஏற்கெனவே உள்ள பேருந்து நிலைய கட்டிடம் இடிக்கப்படுகிறது. படம்: எம்.சாம்ராஜ்
Updated on
1 min read

புதுச்சேரி: ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தின் கட்டிட பணிகள் நடைபெற உள்ள சூழலில், புதிய பேருந்து நிலையம் இடிக்கும் பணி நேற்று தொடங்கியது.

புதுச்சேரியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் ரூ.30 கோடியில் கட்ட திட்டமிடப்பட்டு, பூமிபூஜை போடப்பட்டது. இதில் முதல்கட்டமாக பேருந்து நிலையத்தின் மைய பகுதியில் கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக மைய பகுதியைச் சுற்றிலும் தடுப்புகள் அமைக்கும் பணி தொடங்கியது.

இதற்கு அங்குள்ள வியாபாரிகள், ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரிவித் தனர். இதனால் பணிகள் நிறுத்தப்பட்டன. இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. அவர்களின் கோரிக்கை ஒரு வாரத்துக்குள் நிறைவேற்றப்படும் என்று நகராட்சி ஆணையர் உறுதி அளித்தார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதனை ஏற்றனர்.

இந்நிலையில் நேற்று புதுச்சேரி பேருந்து நிலையத்தின் பழைய கட்டிடத்தை இயந்திரங்கள் கொண்டு இடிக்கும் பணிகள் தொடங்கின. தொடர்ந்து இப்பணி நடை பெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in