Published : 19 Apr 2014 10:46 AM
Last Updated : 19 Apr 2014 10:46 AM

சிவில் படித்தால் வேலைவாய்ப்பு நிச்சயம்: கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் ஜெயப்பிரகாஷ் காந்தி தகவல்

பொறியியல் படிப்பில் சிவில் பாடத்தை எடுத்து படித்தால் வருங்காலத்தில் வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது என்று கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் ’தி இந்து’ எஜுகேஷன் பிளஸ் மற்றும் சாஸ்தா கல்வி குழுமம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இதில் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கலந்துகொண்டு பேசியதாவது:

தொழில் துறையில் உலக நாடுகள் எந்த வகையிலாவது இந்தியாவுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளன. நமது சேவை உலக நாடுகளுக்கு பெரி தும் தேவைப்படுகிறது. இதற்கு இந்தியாவில் உள்ள இளைஞர் வளமே காரணம். இதே நிலை மேலும் 20 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும்.

சாதிக்க விரும்பும் மாணவர்கள் முதலில் கனவுலகில் இருந்து வெளியில் வரவேண்டும். ஒவ் வொரு நிலையிலும் மனிதனின் ஆர்வம் மாறிக்கொண்டே வருகி றது. அதனால் மாணவர்கள் எதிர்காலத்துக்கு ஏற்றவாறு திட்ட மிட்டு தங்கள் படிப்பை தேர்வு செய்ய வேண்டும்.

சிவில் படிப்பது நல்லது

பொறியியல் படிப்பில் சிவில் படிப்புக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. இதனுடன் இதே துறை யில் ஏதேனும் ஒரு முதுநிலை படிப்பையும் படிக்க வேண்டும். இப்படி தேர்ந்தெடுத்து படிப்போ ருக்கு வருங்காலத்தில் வேலை வாய்ப்பு கொட்டிக்கிடக்கிறது. இந்த படிப்பை பெரும்பா லோர் விரும்புவதில்லை. இந்தியா வில் கட்டுமானத் துறையில் போதிய அளவு பொறியாளர்கள் இல்லை. அதனால் திட்டங்களும் பெரிய அளவில் இல்லை. இப் படிப்பை படித்தோர் யாரும் வேலைவாய்ப்பின்றி இருப்ப தில்லை.

இதற்கு அடுத்தபடியாக எலெக்ட்ரிகல்ஸ் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய படிப்புகளை மாணவர்கள் தேர்ந் தெடுக்கலாம். இந்தப் படிப்புகளை நல்ல கல்லூரிகளைத் தேர்வு செய்து படிக்க வேண்டும்.

மாணவர்கள் தங்கள் தனித் திறனை வளர்த்துக்கொள்ள, செய்தித்தாள்களை தொடர்ந்து படிப்பது அவசியம். தொடர்ந்து தொலைக்காட்சிகளை பார்த்துக் கொண்டு இருப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

ஸ்ரீசாஸ்தா கல்வி குழுமம் தலைவர் ஏ.எம்.கே.ஜம்புலிங்கம், துணைத் தலைவர் ஜெ.கார்த்தி கேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x