மதுரையில் கலைஞர் நூலக கட்டுமான பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பித்த முதல்வர் ஸ்டாலின் 

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பொன்னாடை அணிவித்த முதல்வர் ஸ்டாலின் 
கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பொன்னாடை அணிவித்த முதல்வர் ஸ்டாலின் 
Updated on
1 min read

மதுரை: மதுரையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட பணியாளர்களில் இருவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்.

மதுரை - நத்தம் சாலையில் நவீன கட்டுமான அம்சங்களுடன் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டிடத்துக்காக மொத்தம் ரூ.215 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது. இதில் ரூ.60 கோடிக்கு புத்தகங்கள், ரூ.18 கோடிக்கு தளவாடப் பொருட்கள், புத்தகங்களை அடுக்கி வைக்கத் தேவையான ரேக்குகள் மற்றும் கட்டுமானத்துக்காக ரூ.130 கோடியும் செலவிடப்பட்டது.

இந்த பிரம்மாண்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். முன்னதாக, கலைஞர் நூற்றாண்டு நூலக வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில், நூலக கட்டுமான பணிகள் தொடர்புடைய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கினார். மேலும், கட்டுமான பணிகளில் ஈடுபட்ட கட்டுமானப் பணியாளர்கள் சார்பில், தலைமைக் கொத்தனார் அன்புச் செல்வம் மற்றும் கொத்தனார் உதவியாளர் ராக்கு ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in