Published : 15 Jul 2023 05:15 AM
Last Updated : 15 Jul 2023 05:15 AM

அரசுப் பள்ளி குடிநீர் தொட்டிகளில் சோப்பு, பினாயில் கலந்த 4 சிறுவர்கள் கைது

கரூர்: கரூர் மாவட்டம் தரகம்பட்டியுள்ள மேலப்பகுதி ஊராட்சி வீரணம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 12-ம் தேதி பள்ளியில் உள்ள 3 குடிநீர்த் தொட்டிகளிலும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து சிந்தாமணிப்பட்டி காவல்நிலையத்தில், பள்ளி தலைமை ஆசிரியர் ஜேசுராஜ் புகார் அளித்தார்.

அதே பள்ளியில் 8-ம் வகுப்பு வரை படித்த நான்கு சிறுவர்கள் மேற்கொண்டு படிக்காமல், பள்ளி வளாகத்தில் கபடி விளையாடி வந்துள்ளனர். இதை பள்ளித் தலைமை ஆசிரியர் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கடந்த 11-ம் தேதி பள்ளி வளாகத்தில் கபடி விளையாடிய 4 சிறுவர்களும், குடிநீர்த் தொட்டிகளில் பாத்திரம் கழுவும்சோப்பு, பினாயில் ஆகியவற்றைக் கலந்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, சிறுவர்கள் 4 பேரையும் போலீஸார் நேற்று கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x