Published : 25 Jul 2014 09:01 AM
Last Updated : 25 Jul 2014 09:01 AM

முதுபெரும் தமிழறிஞர் நயினார் முகமது காலமானார்

திருச்சி ஜமால் முகமது கல்லூரி யின் முன்னாள் முதல்வரும் முதுபெரும் தமிழறிஞருமான முனைவர் சி.நயினார் முகமது (85) புதன்கிழமை இரவு அமெரிக் காவின் டெக்சாஸ் மாகாணத்தில் தனது மகள் இல்லத்தில் காலமானார்.

10 ஆயிரத்துக்கும் மேற் பட்ட நடுத்தர ஏழை மாணவர் கள் பயின்றுவரும் ஜமால் முகமது கல்லூரி, நயினார் முகமது முதல்வராக பொறுப்பேற் பதற்கு முன்பு வரை டெல்டா மாவட்ட மாணவர்கள் வட்டாரத் தில் ‘ஜாலி ஜமால்’ என்கிற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. அவர் பொறுப்பேற்ற பிறகு ‘ஜெயில் ஜமால்’ என பெயர் அழைக்கப்பட்டது. காரணம் அவர் காட்டிய கட்டுப்பாடு.

கல்லூரி நிர்வாகம் அவரது நிர்வாகத் திறமையைப் பாராட்டி ஓய்வுபெற்ற பிறகும் மேலும் 2 ஆண்டுகள் முதல்வராக நீடிக்க அனுமதி வழங்கியது. அப்போது தான் கணினி பிரபலமடையத் தொடங்கிய காலம். தனக்குத் தெரிந்த நன்கொடையாளர்களை அணுகி 1988-ம் ஆண்டு அதி நவீன வசதி கொண்ட கணினி துறையை ஜமால் முகமது கல்லூரி யில் உருவாக்கி மற்ற கல்லூரி களை பொறாமைப்பட வைத்தார். கல்லூரி அசுர வேகத்தில் வளர் வதற்கான திட்டங்களை உருவாக் கினார்.

தமிழ் மொழியின் மீது தீராத காதல் கொண்ட நயினார் முகமது, நிறைய ஆராய்ச்சிக் கட்டுரைகள், நூல்களை எழுதியுள்ளார். குன்றக் குடி அடிகளாரின் நெருங்கிய நண்பர். அடிகளார் இவருக்கு பெரும்புலவர் பட்டம் வழங்கி பெருமிதப்படுத்தினார். திருக்குர் ஆன்- உடன் திருக்குறள் எப்படி ஒத்துப்போகிறது என ஆராய்ச் சிக் கட்டுரை எழுதி மதச்சார் பின்மைக்கு வித்திட்டவர் நயினார் முகமது.

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதனுடன் இணைந்து தமிழக புலவர் குழுவை உருவாக்கி அதன் செயலராக 28 ஆண்டுகள் பணியாற்றியவர். மதுரை காம ராஜர் பல்கலைக்கழகம் தமிழ்ச் செம்மல் என்ற பட்டம் வழங்கி இவரைக் கவுரவித்தது. திருச்சி தமிழ்ச் சங்கத்தின் துணை அமைச்சராக இறக்கும்வரை பொறுப்பிலிருந்தார்.

இஸ்லாமிய இலக்கியக் கழகம் என்கிற அமைப்பை தோற்றுவித்து 5 சர்வதேச இலக்கிய மாநாடுகளை நடத்தி அதன் மூலம் இஸ்லாமிய இலக்கியத்தை பொதுஜன வெளியில் கொண்டு வந்தவர்.

இவருக்கு மனைவி, மகள், 4 மகன்கள் உள்ளனர். பிள்ளைகள் அனைவரும் பொறியியல் நிபுணர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x