786: பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு ரம்ஜான் சிறப்புச் சலுகைகள்

786: பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு ரம்ஜான் சிறப்புச் சலுகைகள்
Updated on
1 min read

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது பீரிபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவித்துள்ளது.

இதில் ரூ.786 க்கான சிறப்பு சலுகை திட்டத்தில் ரூ.786க்கு ரீச்சார்ஜ் செய்தால் ரூ.786 டாக்டைம் மற்றும் 786 உள்ளூர் மற்றும் தேசிய எஸ்.எம்.எஸ் ஆகியவை கிடைக்கும். இந்த சலுகை 30 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த சலுகை ஜூலை 24-ஆம் தேதியிலிருந்து 90 நாட்களுக்கு வழங்கப்படும்.

ரம்ஜான் பண்டிகையையட்டி ஒரு நல்ல எண்ணத்துடன் இச்சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பி.எஸ்.என்.எல் குழு இயக்குனர் அனுபம் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.

இதோடு மற்றொரு சேர்க்கை சலுகையையும் அவர் தெரிவித்தார். சலுகை 555 திட்டத்தில் ரூ.470 டாக்டைம் கொடுக்கப்படும். அதோடு பி.எஸ்.என்.எல் நெட்வர்கில் உள்ள வாடிக்கையாளர்களுடன் பேச 280 நிமிட இலவச அழைப்புகளும் கொடுக்கப்படும். இத்திட்டத்தின் செல்லுபடி காலம் 90 நாட்கள் ஆகும்.

இதேபோல், இலவச ரோமிங் திட்டம் 33-ல் 7 நாட்களுக்கு ரோமிங்கில் உள்வரும் அழைப்புகள் இலவசமாக கொடுக்கப்படும். அக்காலக்கட்டத்தில் வெளி செல்லும் அழைப்புகளுக்கு வினாடிக்கு ஒன்றரை பைசா வசூலிக்கப்படும் என்று பி.எஸ்.என்.எல் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in