

சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, மாநகரப் போக்குவரத்துக் கழக அடையாறு பணிமனையில் நேற்று சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்காக ரூ.5 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள குளிர்சாதன ஓய்வறையை திறந்துவைத்தார்.
பின்னர், ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு, பணிபுரிவதைத் தடுக்கும் வகையில் அனைத்து பணிமனைகளுக்கும் ரூ.15.05 லட்சம் மதிப்பிலான ப்ரீத் அனலைசர் கருவிகளை வழங்கினார். மேலும், ரூ.28.92 லட்சம் மதிப்பில், ஓட்டுநர்கள் பயிற்சி பெறுவதற்காக 3 கனரக சிமுலேட்டர் இயந்திரங்களையும், பொதுமக்கள் ஓட்டுநர் பயிற்சி பெறுவதற்கு ரூ.8.06 லட்சம் மதிப்பிலான காரையும் அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். தொடர்ந்து, இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், ஜே.எம்.எச்.ஹசன் மௌலானா எம்எல்ஏ, போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திரரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.