தருமபுரி எம்.பி மீது கும்பகோணம் காவல் நிலையத்தில் இந்து மக்கள் கட்சி புகார்

தருமபுரி எம்.பி செந்தில்குமார் | கோப்புப் படம்
தருமபுரி எம்.பி செந்தில்குமார் | கோப்புப் படம்
Updated on
1 min read

கும்பகோணம்: தருமபுரி எம்.பி மீது கும்பகோணம் காவல் நிலையத்தில் இந்து மக்கள் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் டி.குருமூர்த்தி, கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், “தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், சிவன், பார்வதி, விநாயகர், முருகன் குறித்த கடவுள்களை பற்றி அவதூறான கருத்துக்களை பயன்படுத்தியும், சிவன் குடும்பக் கட்டுப்பாடு செய்து விட்டாரா என பேசி இந்துக்களை மன வேதனைப்படுத்தியுள்ளார். இவரது பேச்சு எனது மனதை மிகவும் காயப்படுத்தியதால், மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளேன்.

எனவே, இதுபோன்ற சமூகப் பதற்றத்தை உருவாக்கும் வகையில் உள்நோக்கத்தோடு இந்து மதத்தையும், வழிபாட்டு நம்பிக்கையையும் இழிவுபடுத்தியுள்ளதால், எம்பி செந்தில்குமார் மீது 295(பி), 153(ஏ) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்திட வேண்டும்” என்று அந்தப் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in