

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம்: ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்கள் அறக்கட்டளையின் நோக்கத்துக்கு எதிராகநடைபெறுவது காலம் காலமாகவே நடைபெற்று வருகிறது. சென்னைக்கு கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு 125 ஏக்கர்நிலம் குத்தகைக்கு பெறப்பட்டது உள்ளிட்டவற்றை ஏற்க முடியாது.
கிழக்குக் கடற்கரைச் சாலையிலும், அதையொட்டிய பகுதிகளிலும் அரசுக்கு சொந்தமாக ஏராளமான நிலங்கள் உள்ளன. ஆளவந்தார் அவரது உழைப்பால் ஈட்டிய சொத்துகளை திரைப்பட நகரம், சூரிய ஒளி மின்திட்டம் என்ற பெயரில் தாரை வார்ப்பதை அனுமதிக்க முடியாது. ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை திரைப்பட நகரம், சூரிய ஒளி மின்திட்டம், கட்டுமானத் திட்டங்கள் என்ற பெயரில் தனியாருக்கு தாரை வார்ப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும்.
அவற்றுக்கு மாற்றாக, நிலங்களை இறைப்பணி தவிர்த்து வன்னியர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்நிலை மேம்பாட்டுக் கான திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.