பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னைமுன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: 2016 பொதுத் தேர்தலின்போது, தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், தற்போது மதுக்கடைகளை காலை 7 மணி முதலே திறக்க யோசித்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் முத்துசாமி கூறியிருப்பது, திமுகவின் சுயரூபத்தை வெளிப்படுத்தியுள்ளது.

மது அருந்துபவர்களில் 40 சதவீதத்தினரின் நலனுக்காக 90 மி.லி. மது பாக்கெட் அறிமுகம், காலை 7 மணி முதல் 9 மணி வரை மதுக்கடைகளை கடைகளை திறக்க வேண்டுமென்ற கோரிக்கையை பரிசீலிப்பது போன்றவை குறித்து தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக அமைச்சர் கூறியிருப்பது முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.

மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து, பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in