Published : 13 Jul 2023 06:09 AM
Last Updated : 13 Jul 2023 06:09 AM
சென்னை: வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: இமாச்சலப் பிரதேசத்துக்கு சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள், கனமழையால் தமிழகம் திரும்ப முடியவில்லை என்று தகவல் கிடைத்தது. இது தொடர்பாக இமாச்சலப் பிரதேச அதிகாரிகளிடம் கேட்டறியப்பட்டது. இதற்கிடையே, இமாச்சலப் பிரதேச டிஜிபி மூலம் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதேபோல, அமர்நாத் பனிலிங்கம் தரிசிக்கச் சென்ற தமிழக பக்தர்கள்நிலச்சரிவு ஏற்பட்டதால் ஊருக்குத்திரும்பும் பயணம் தடைபட்டதாக அறியப்பட்டது. இதுகுறித்து விசாரித்தபோது, அமர்நாத் பாதை சரிசெய்யப்பட்டு, மீண்டும் போக்குவரத்து தொடங்கி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகப் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்ய, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT