Published : 13 Jul 2023 04:03 AM
Last Updated : 13 Jul 2023 04:03 AM
தேனி: மக்களவைத் தேர்தலில் பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தருகிறோம் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
புதிய தமிழகம் கட்சி சார்பில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி பங்கேற்றார்.
முன்னதாக தேனியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களவைத் தேர்தலில் பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணிக்குத்தான் ஆதரவு தருகிறோம். பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான காரணத்தை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். மது பழக்கத்தால் திருப்பூர் போன்ற நகரங்களில் தமிழர்கள் பணிக்குச் செல்வது குறைந்து விட்டது. இதன் காரணமாக வட மாநிலங்களை சேர்ந்தோர் அங்கு அதிக அளவில் வந்து பணிபுரிகின்றனர்.
பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் பல்வேறு போராட் டங்கள், பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வரு கின்றன. அதன் ஒரு பகுதியாக ஜூலை 15-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள் முன் பெண்கள் தலைமையில் மது பாட்டில்கள் உடைப்புப் போராட்டம் நடைபெறும். ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் அனைத்து மதுபான ஆலைகளையும் மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT