Published : 11 Jul 2023 04:00 AM
Last Updated : 11 Jul 2023 04:00 AM

கோவை | அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக ஆதரவாளர் ஜாமீனில் விடுதலை

உமா கார்க்கி | கோப்புப் படம்

கோவை: கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த பாஜக ஆதரவாளர் உமா கார்க்கி (56). இவர், ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் குறித்து அவதூறான கருத்துகளை

பதிவிட்டுள்ளதாக திமுக பிரமுகர் ஹரீஷ், சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். அதன் பேரில், கடந்த ஜூன் 20-ம் தேதி அவரை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், உமா கார்க்கி தனக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை கோவை 4-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் கடந்த ஜூன் 26-ம் தேதி தள்ளுபடி செய்தது.

அதைத்தொடர்ந்து, கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி உமா கார்க்கி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு கடந்த 7-ம் தேதி ஜாமீன் வழங்கியது. அதைத்தொடர்ந்து, கோவை மத்திய சிறையில் இருந்து நேற்று அவர் விடுவிக்கப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x