Published : 26 Jun 2023 06:24 AM
Last Updated : 26 Jun 2023 06:24 AM
சென்னை: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தப் பிரச்சி னைக்கு மத்திய அரசு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மநீம தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
வைகோ: கடந்த 8-ம் தேதி கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 15 பேரை, எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கைகடற்படையினர் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே கடந்த ஜூன் மாதம் 22மீனவர்களை கைது செய்து, நிபந்தனைகளுடன் இலங்கை நீதிமன்றம் விடுதலைசெய்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் தமிழக மீனவர்களை கைது செய்துள்ளனர். இதில் மத்திய அரசு தலையிட்டு, தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு இலங்கை அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்.
ஜி.கே.வாசன்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீணவர் கள் 15 பேரை இலங்கை கடற் படையினர் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. மீன்பிடித் தடைக்காலம் முடிந்து, வாழ்வாதாரத்துக்காக மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்வது, மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இனியும் தாமதிக்காமல், இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கமல்ஹாசன்: கச்சத்தீவு அருகே இந்திய கடல் பகுதியில் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் தமிழக மீனவர் களை தொடர்ந்து கைது செய்து வரும் இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் கண்டனத்துக்குரியவை.
இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க, தனது அமைச்சர்கள் குழுவுடன் இம்மாத இறுதியில் இந்தியா வருகிறார். அப் போது, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது குறித்து அவருடன் விவாதித்து, மத்திய அரசு இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT