

முக்கிய பிரமுகர் ஒருவரை கொலை செய்யும் திட்டத்துடன் திருவொற்றியூரில் பதுங்கியிருந்த 5 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை திருவொற்றியூர் பகுதியில் ரவுடிகள் சிலர் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தக வல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து உதவி ஆணையர் நசீர்பாஷா, ஆய் வாளர் பிரபு, உதவி ஆய்வாளர்கள் உமைவேல் பாண்டியன், சுந்தர் மற்றும் போலீஸார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் அருகே பதுங்கியிருந்த 5 பேர் சுற்றி வளைக்கப்பட்டனர்.
அவர்கள் கோவையைச் சேர்ந்த தனஞ்செயன், காசிமேடு சார்லஸ், யுவராஜ், எர்ணாவூர் சுரேஷ். புஷ்பா கரன் என்பது தெரிந்தது. தனஞ் செயன், புதுவண்ணாரப்பேட்டை அப்துல் காதர் என்பவரை கொலை செய்த வழக்கில் தலைமறைவு குற்றவாளியாவார். சார்லஸ் மற் றும் யுவராஜ் ஆகியோர் ராயபுரத் தைச் சேர்ந்த பிரான்சிஸ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள். செங்கல்பட்டு ரியல் எஸ்டேட் அதி பர் விஜயகுமார் கொலை வழக்கில் சுரேஷுக்கும், வியாசர்பாடியை சேர்ந்த சதீஷ், எம்.கே.பி.நகர் காமேஷ் ஆகியோரை கொலை செய்த வழக்கில் புஷ்பாகரனுக்கும் தொடர்பு உள்ளது.
இவர்கள் 5 பேரும் சேர்ந்து சென்னையில் முக்கிய நபர் ஒருவரை கொலை செய்ய திட்டம் போட்டிருந்தது தெரியவந்தது. கைதான 5 பேரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.