

கோடைக் காலத்தில் குளிர்சாதனப் பொருட்களின் விற்பனை குறைவாக இருப்பதால், வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கோடைக் காலத்தில் குளிர்சாதன பொருட்கள் விற் பனை அதிகமாக இருக்கும். இந்த நாட்களில் நூறு டிகிரிக்கும் மேல் வெயில் இருக்கும். எனவே மக்கள் வெப்பத்திலிருந்து காத்துக் கொள்ள ஏ.சி., ஃபிரிட்ஜ் உள்ளிட்ட குளிர் சாதனப் பொருட்களை அதிகளவில் நாடுகின்றனர்.
தற்போது இன்வர்ட்டருடன் இணைக்கப்பட்ட ஏ.சி.க்களும், கொசுவை விரட்டும் ஏ.சி.க்களும் விற்பனைக்கு வந்துள்ளன. ஆனால், அவற்றின் விற்பனை சற்றுக் குறைவாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக வீட்டு உப யோகப் பொருட்களை விற்பனை செய்து வரும் தனியார் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு மேலாளர் ஒருவர் கூறுகை யில், தற்போது சென்னை போன்ற நகரங்களில் மின்வெட்டு குறைவாக உள்ளதால் குளிர்சாதனப் பொருட்களின் விற்பனை குறைந்து உள்ளது. கோடைக் காலம் தொடங்கி ஒரு மாதக் காலம் ஆன நிலையிலும் குளிர்சாதனப் பொருட்களுடைய விற்பனை சற்று குறைவாகவே இருந்து வருகிறது. அதே போல மின்சாரச் சேமிப்பிற்காகப் பயன் படுத்தப்பட்டு வரும் இன்வர்ட்டர் விற்பனையும், இந்த கோடையில் குறைந்து உள்ளது” என்றார்.