தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு ஆகஸ்ட் 15 வரை விண்ணப்பிக்கலாம்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சென்னை: சுற்றுலாத் துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சுற்றுலாவின் வெற்றியாளர்கள், பயண ஏற்பாட்டாளர்கள் மற்றும் புதிய யுக்திகளைக் கையாளுபவர்களுக்கு ஆண்டுதோறும் செப்.27-ம் தேதி உலக சுற்றுலா தினத்தில் சுற்றுலா விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான சுற்றுலா விருது செப்.27-ம் தேதி உலக சுற்றுலா தினத்தில் வழங்கப்பட இருக்கிறது.

அதன்படி, தமிழ்நாட்டுக்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், சிறந்த உள்நாட்டுச் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், சிறந்த பயண பங்குதாரர், சிறந்த விமான பங்குதாரர், சிறந்த தங்குமிடம், சிறந்த உணவகம், சிறந்த மாவட்டம், சுத்தமான சுற்றுலாத் தலம், சமூக ஊடகங்களில் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்துபவர், சிறந்த சுற்றுலா வழிகாட்டி உட்பட 17 வகையான விருதுகள் வழங்கப்பட உள்ளன.

எனவே, விருதுகளுக்குத் தகுதியானவர்கள், விருதுகளுக்கான விண்ணப்பங்களை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்தி செய்து ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு தமிழ்நாடு சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in