

சென்னை: சென்னை மாநகராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் போக்குவரத்து காவல்துறை சார்பில் நேற்று வேப்பேரி கங்காதீஸ்வரர் கோயில் சாலையில் பொதுமக்களுக்கு காற்று மாசால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பொது இடங்களில் குப்பையைகொட்டி எரிக்கக்கூடாது, அதிகமாக சத்தம் எழுப்பும் காற்று ஒழிப்பான்களை வாகனங்களில் பயன்படுத்தக் கூடாது, அதிக புகைகக்கக்கூடிய வாகனங்களை இயக்கக்கூடாது, சிக்னலில் வாகனங்களில் நிற்கும்போது, அதிகளவில் புகை கக்கக்கூடிய வகையில் ஆக்சிலேட்டரை இயக்கக்கூடாது என்றும், இதனால், காற்று மாசு அடைந்து நுரையீரல் பாதிப்புஏற்படும் என்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இது தொடர்பாக வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீஸார் துண்டுப் பிரசுரங்கள் வழங்கினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், வேப்பேரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டிவேல் உள்ளிட்ட போலீஸார் கலந்து கொண்டனர்.