

மதுரை: சிறைக் கைதிகளுக்கான கணினிமய அங்காடி திட்டம், மதுரை மத்திய சிறையில் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
தமிழ்நாடு சிறை,சீர்த்திருத்தப் பணிகள் துறையில் அறிமுகப்படுத்திய சிறை மேலாண்மைத் திட்டம் மூலம், முதல் கட்டமாக அனைத்து மத்திய சிறை களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இவற்றின் செயல்பாடு களை சென்னை சிறைத் துறை தலைமை அலுவலகத்தில் இருந்து உயர் அதிகாரிகள் கண்காணிக்க முடியும்.
மேலும் அனைத்து சிறை, பெண்கள் தனிச் சிறையில் செயல்படும் கைதிகளுக் கான அங்காடியும் முற்றிலும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களை விற்கும் திட்டமும் நடைமுறைக்கு வந்துள்ளது. இத்திட்டத்தை கடந்த 3-ம் தேதி சென்னை புழல் சிறையில் சிறைத் துறை டி.ஜி.பி அமரேஷ் பூஜாரி தொடங்கி வைத்தார்.
அனைத்து மத்திய சிறைகள், பெண்கள் சிறைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களையும் ஒரே விலையில் விற்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. தங்களுக்குத் தேவையான பேஸ்ட், பிரஷ் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட் கள், உணவு பொருட்களை பி.சி.பி கேன் டீன் மூலம் சிறை வாசிகள் விரல் ரேகை களை பதிவிட்டு பெறலாம்.
இத்திட்டம் மதுரை மத்திய சிறையிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இச்சிறையில் தண்டனை உள்ளிட்ட அனைத்து கைதிகளின் விவரங்களையும் கணினியில் பதி வேற்றம் செய்து சோதனை அடிப்படையில் ஒரு வாரமாக ஆய்வு செய்தனர். இதையடுத்து, மத்திய சிறை டி.ஐ.ஜி பழனி, சிறை கண்காணிப்பாளர் பரமேசு வரன் ஆகியோர் நேற்று இத்திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இதன்படி சிறைவாசிகள் தங்களது கணக்கு விவரத்தை தெரிந்து கொள்ளலாம். தாங்கள் வாங்கிய பொருட்களுக்கான ரசீதையும் பெற்றுக் கொள்ளலாம் என டி.ஐ.ஜி பழனி தெரிவித்தார்.