Published : 08 Jul 2023 09:12 AM
Last Updated : 08 Jul 2023 09:12 AM
தேனி: கோவையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட டிஐஜி விஜயகுமார் உடல் நேற்று மாலை தேனி ரத்தினம் நகரில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
அங்கு, டிஜிபி சங்கர் ஜிவால், அமைச்சர் ஐ.பெரியசாமி, ஐ.ஜி.க்கள் சுதாகர் (மேற்கு மண்டலம்), அஸ்ரா கார்க் (தென் மண்டலம்), டிஐஜி-க்கள் அபிநவ்குமார் (திண்டுக்கல்), சரவணசுந்தர் (திருச்சி), எஸ்.பி.க்கள், பாஸ்கரன் (திண்டுக்கல்), பிரவீன் உமேஷ் டோங்கரோ (தேனி) மற்றும் காவல் துறை அதிகாரிகள், உறவினர்கள், பொதுமக்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், அவரது உடலை காவல்துறை அதிகாரிகள், அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏற்றினர். ரத்தினம் நகரில் புறப்பட்ட இறுதி ஊர்வலம் பொம்மையகவுண்டன்பட்டி, அல்லிநகரம், பெரியகுளம், கம்பம் சாலை வழியாக தேனி நகராட்சி பொது மயானத்தை அடைந்தது. பொதுமக்கள், காவல்துறை அதிகாரிகள் உடன் சென்றனர். பின்னர், காவல் துறையினரின் மரியாதையுடன், 21 குண்டுகள் முழங்கமின் மயானத்தில் விஜயகுமார் உடல் தகனம் செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT