ரயில்பாதை ஆய்வுக்கு முன்பே ரூ.11,400 கோடி நிதியை காங். ஒதுக்கியது எப்படி? - பாஜக மாநில துணை தலைவர் கேள்வி

ரயில்பாதை ஆய்வுக்கு முன்பே ரூ.11,400 கோடி நிதியை காங். ஒதுக்கியது எப்படி? - பாஜக மாநில துணை தலைவர் கேள்வி
Updated on
1 min read

சென்னை: பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கை: ராமேசுவரம்-தனுஷ்கோடி ரயில்பாதை திட்டம் 2006-07-ல் தொடங்கப்பட்டு, ரூ.11,400கோடி நிதி தேவை என அறிவிக்கப்பட்டதில், 2020-ம் ஆண்டில்ரூ.211 கோடியும், 2023-24-ல் ரூ.1,000 கோடியும் ஒதுக்கப்பட்டது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

2006-2007-ல் இதுபோன்ற ஒரு திட்டமே அறிவிக்கப்படவில்லை. 2011-ம் ஆண்டுதான் நாடாளுமன்றத்தில், ராமேசுவரம்-தனுஷ்கோடி ரயில்பாதை குறித்து ஆய்வு செய்யப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் முனியப்பா கூறியிருந்தார். ஆய்வே முடியாதபோது, 4 ஆண்டுமுன்பே ரூ.11,400 கோடி நிதியை காங்கிரஸ் ஒதுக்கியது எப்படி?

இந்தியாவில் ஒரு கிலோமீட்டர் ரயில்பாதை அமைக்க ரூ.8 கோடிசெலவாகும். ஆனால், கடல் சூழந்தபகுதியில் ரயில் பாதை அமைக்க கிலோமீட்டருக்கு ரூ.40 கோடி செலவாகும். அந்த வகையில், 18 கி.மீ. மட்டுமே உள்ள இந்த பாதைக்கு, அதிகபட்சம் ரூ.720 கோடி மட்டுமே செலவாகும். ஆனால், காங்கிரஸ் அரசு ரூ.11,400கோடி ஒதுக்கியது ஏன்? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in