

தஞ்சாவூர்: உலக சாக்லெட் தினம் இன்று பல்வேறு நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
இதனை தொடர்ந்து கும்பகோணம் கார்த்திக் வித்யாலயா பள்ளியில் உலக சாக்லேட் தினத்தையொட்டி தமிழர்களின் பாரம்பரியமான திண்பண்டங்களின் கண்காட்சி இன்று நடைபெற்றது.
பள்ளியின் நிறுவனர் கார்த்திகேயன் தலைமை வகித்து, சாக்லேட் உடையணிந்து வந்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். தாளாளர் கே.பூர்ணிமா முன்னிலை வகித்து, தமிழர்களின் பாரம்பரியமான திண்பண்டங்கள் குறித்து பேசினார்.
இந்த நிகழ்வில் பொறி உருண்டை, தேன்மிட்டாய், கமர்கட்,கடலை மற்றும் எள்ளுமிட்டாய்கள், தேங்காய் மிட்டாய், ஜீரகமிட்டாய், புளிப்பு மிட்டாய் உள்ளிட்ட பல்வேறு வகையான தமிழர்களின் பாரம்பரியமான திண்பண்டங்களும், மேலும், சாக்லேட்டினால் பெண் போல் வடிவமைத்து காட்சிப்படுத்தியிருந்தனர்.
இறுதியில் அனைவரும் பாரம்பரியமான திண்பண்டகளை மட்டும் சாப்பிடுவோம் என மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.