

சென்னை: கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், இன்று மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
மதுரை புறநகர் மாவட்டம் சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து பாஜகவின் கூட்டுறவு பிரிவு மாநிலத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், பாஜகவில் இருந்து விலகி இன்று மீண்டும் அதிமுகவில் இணைந்தார். சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் இன்று மீண்டும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார்.