Published : 07 Jul 2023 11:23 AM
Last Updated : 07 Jul 2023 11:23 AM

தோனிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

மு க ஸ்டாலின் மற்றும் தோனி

சென்னை: தோனிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், என்றென்றும் சிஎஸ்கே அணியின் தல எனப் போற்றப்படும் எம்.எஸ்.தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் சாதனைகள் மற்றும் உங்கள் எளிமையான தொடக்கங்கள் இந்தியா முழுவதும் உள்ள எண்ணற்ற இளைஞர்களின் வாழ்க்கையில், குறிப்பாக சாதாரண பின்னணியிலிருந்து வந்தவர்களின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. உங்கள் ஈடு இணையற்ற தலைமைப் பண்புகளால் நீங்கள் தொடர்ந்து ஒளிவீசிடவும், அனைவருக்கும் ஊக்கமளிக்கவும் வாழ்த்துகிறேன்." இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x