Published : 07 Jul 2023 04:10 AM
Last Updated : 07 Jul 2023 04:10 AM
கடலூர்: கடலூரில் காய்கறி விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தக்காளி ரூ.130-க்கும், சின்ன வெங்காயம் ரூ.150-க்கும் விற்பனையாகி வந்ததால் முதற்கட்டமாக சென்னை மாநகரில் ரேஷன் கடைகளில் ரூ.60-க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடலூர் மாவட் டத்தில் கடந்த சில தினங்களாக ரூ.92, ரூ.88 ஆகிய விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சிய டைந்தனர். மேலும் பீன்ஸ், பச்சை மிளகாய் போன்றவற்றின் விலையும் அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து காய்கறி விலைகள் அதிகரிப்பதால் அனைத்து தரப்பு மக்களும் கடுமை யாக பாதிக்கப்படுகின்றனர்.
தற்போது இஞ்சி விலை வர லாறு காணாத வகையில் உயர்ந்து கிலோ ரூ.280-க்கு விற்பனை செய் யப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் இஞ்சி ரூ.190-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் சில்லரை கடையில் ரூ.280-க்கும், மொத்த காய்கறி விற்பனை கடையில் ரூ.255-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் சின்ன வெங்காயம் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.30 விலை உயர்ந்து ரூ.90-க்கும், தக்காளி விலை ரூ.88 முதல் ரூ.92 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்ட பச்சை மிளகாய் ரூ.70-க்கு விற்பனையாகிறது. உருளைக் கிழங்கு ரூ.40-க்கும், பீன்ஸ் ரூ.120-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து காய்கறி வியாபாரி ஒருவர் கூறுகையில், “கர்நாடகா மாநிலத்தில் இருந்து இஞ்சி வருகிறது. அங்கு பலத்த மழை பெய்து வருவதால் இஞ்சி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. விலை ஏற்றம் காரணமாக சின்ன வெங்காயமும் ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக இஞ்சி விலை ரூ.200-க்கு மேல் விற்பனை செய்யப்படாத நிலையில் தற்போது வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்து ரூ.280 வரை விற்பனையாகிறது. கர்நாடகாஉள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர் மழை காரணமாக காய்கறி விலை அதிகளவில் உயர்ந்துள்ளதால் வியாபாரிகளும், மக்களும் கடும் அவதியடைந்து வருகிறோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT