Published : 06 Jul 2023 07:08 AM
Last Updated : 06 Jul 2023 07:08 AM

சென்னையில் ஜூலை 24, 25, 26-ல் நடைபெறுகிறது பேரிடர் அபாயம் குறைப்பு குறித்த ஜி-20 கூட்டம்: முன்னேற்பாடுகள் செய்ய தலைமைச் செயலர் உத்தரவு

சென்னை: பேரிடர் அபாய குறைப்பு தொடர்பாக ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டம் சென்னையில் வரும் ஜூலை 24, 25, 26-ம் தேதிகளில் நடக்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2022 டிச.1 முதல் 2023நவ.30-ம் தேதிவரை நடைபெறஉள்ள ஜி-20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை வகிக்கிறது.

இந்தியா தலைமையில் ஜி-20ல் பேரிடர் அபாயத்தை குறைப்பதற்கான புதிய பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட பணிக்குழுவின் 3 கூட்டங்களை வெவ்வேறு நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டு, காந்தி நகர், மும்பையில் 2 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. சென்னையில் 3-வது கூட்டம்வரும் ஜூலை 24, 25, 26-ம் தேதிகளில் நடைபெறுகிறது.

இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து துறைகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு தலைமை வகித்த தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, கூட்டத்தில் பங்கேற்ற தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அலுவலர்களை வரவேற்றார். 3 நாள் கூட்டத்தை சிறப்பாக நடத்த அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்யுமாறு சம்பந்தப்பட்ட துறை செயலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் செயலர் கமல் கிஷோர், உறுப்பினர் ராஜேந்திர சிங், ஜி-20 மாநாட்டின் இயக்குநர் மிருணாளினி வஸ்தவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x