

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் பணிகள் சென்னை லைட் ஹவுஸ் (கலங்கரை விளக்கம்) பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் காந்தி சிலைக்கு பின்புறம் உள்ள மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையின் 7.02 மீட்டர் அகலம் மற்றும் 480 மீட்டர் நீளம் முழுவதும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இப்பகுதியை வாகன ஓட்டிகள் பயன்படுத்த இயலாது.
இதன் காரணமாக மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் இன்று முதல் (6-ம் தேதி) ஓராண்டுக்கு மெரினா பகுதியில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை போக்குவரத்து போலீஸார் வெளியிட்ட அறிவிப்பு: லூப் ரோடு மற்றும் காமராஜர்சாலையிலிருந்து வரும் வாகனங்கள் லைட் ஹவுஸிலிருந்து மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை வழியாக போர் நினைவுச் சின்னம் நோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
மாறாக, அந்த வாகனங்கள் காமராஜர் சாலைவழியாக சென்று இலக்கை அடையலாம். போர் நினைவு சின்னத்திலிருந்து வரும் வாகனங்கள் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை வழியாக லைட் ஹவுஸை நோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள் காமராஜர்சாலை வழியாக சென்று இலக்கை அடையலாம்.
லைட் ஹவுஸில் இருந்து மெரினா கடற்கரை சர்வீஸ் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் காந்தி சிலைக்கு பின்னால் தடை செய்யப்பட்டபகுதி வரை செல்லலாம். அதன் பிறகு நேராக முன்னோக்கி செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, அவர்கள் யூ டர்ன் செய்து லைட் ஹவுஸ் வந்தடைந்து, வலதுபுறம் திரும்பி காமராஜர் சாலை வழியாக செல்லலாம்.
போர் நினைவுச் சின்னத்திலிருந்து மெரினா கடற்கரை சர்வீஸ் சாலைக்கு செல்ல விரும்பும்வாகனங்கள் காந்தி சிலைக்கு பின்னால் உள்ள தடை செய்யப்பட்ட பகுதி வரை செல்லலாம். அதன் பிறகு நேராக முன்னோக்கி செல்லதடை செய்யப்பட்டுள்ளது. அதற்குபதிலாக, அவர்கள் யூ-டர்ன் செய்துஇடது பக்கமாக திரும்பி லாயிட்ஸ் சாலை வழியாக காமராஜர் சாலையை அடைந்து இலக்கை அடையலாம்.