மினி பேருந்துகளால் ரூ.11 கோடி வருவாய்- அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

மினி பேருந்துகளால் ரூ.11 கோடி வருவாய்- அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
Updated on
1 min read

சென்னையில் இயக்கப்பட்டு வரும் மினி பேருந்துகள் மூலம் அரசுக்கு ரூ.11 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் வியாழக் கிழமை கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினர் செல்வராஜ் (சேலம் தெற்கு) கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது:

சேலத்தில் அரசு போக்குவரத் துக் கழக நகரப் பேருந்துகள் 212 மூலம் 3,452 நடைகளும், தனியார் பேருந்துகள் 94 மூலம் 1,692 நடைகளும், தனியார் மினி பேருந்துகள் 12 மூதல் 240 நடைகளும் இயக்கப்படுகின்றன. சேலம் மாநகராட்சி எல்லைக்

குட்பட்ட அனைத்து சாலைகளிலும் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படு கின்றன. அரசுப் பேருந்துகளில் சராசரியாக 47.83 சதவீதம் பேர் பயணம் செய்கின்றனர். இந்த வசதிகளே சேலம் பகுதி மக்களின் போக்குவரத்து தேவையை நிறைவு செய்யும் வகையில் இருப்பதால், அங்கு புதிய சிற்றுந்துகள் (மினி பஸ்) இயக்க வேண்டிய அவசியம் இல்லை.

சென்னையில் பெரிய பேருந்து கள் செல்ல முடியாத இடங்களில் இயக்கப்படும் 100 சிற்றுந்துகளில் இதுவரை 1 கோடியே 58 லட்சத்து 88 ஆயிரத்து 532 பேர் பயணம் செய்துள்ளனர். ரூ.11 கோடியே 36 லட்சத்து 65 ஆயிரத்து 404 வருவாய் கிடைத்துள்ளது. சென்னையில் சிற்றுந்து போக்குவரத்துக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in