திங்கள் முதல் வெள்ளி வரை பொதுமக்கள் புகார் அளிக்கலாம்: டிஜிபி சங்கர் ஜிவால் அறிவிப்பு

திங்கள் முதல் வெள்ளி வரை பொதுமக்கள் புகார் அளிக்கலாம்: டிஜிபி சங்கர் ஜிவால் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: டிஜிபியாக சங்கர் ஜிவால் பதவியேற்ற பின்னர் முதல் அறிவிப்பாக, வார நாட்களில் தினமும் பொதுமக்கள் மற்றும் போலீஸார் டிஜிபி அலுவலகத்தில் நேரில் புகார் மனு அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக காவல் துறை தலைமை டிஜிபியாகஇருந்த சி.சைலேந்திரபாபு கடந்த வெள்ளியுடன் பணி ஓய்வு பெற்றார். அந்த பணியிடத்துக்கு சென்னை காவல் ஆணையராக இருந்தசங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேலும், ரவுடிகளுக்கு எதிரான,கள்ளச் சாராயத்துக்கு எதிரான நடவடிக்கை தொடரும். போலீஸார், பொதுமக்களின் நலன்காக்க பல புதிய திட்டங்கள் உள்ளன என்றார்.

இந்நிலையில், டிஜிபியாக பொறுப்பேற்ற உடன் முதல் அறிவிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார். அதில், சங்கர் ஜிவால் கூறியிருப்பதாவது: பொதுமக்கள் மற்றும் காவலர்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில் அவர்களின் மனுக்களை, திங்கள் முதல் வெள்ளி வரை அரசு விடுமுறை நாட்கள் தவிர, தினமும் காலை 11.30 மணிக்கு டிஜிபி அலுவலகத்தில், பார்வையாளர்கள் அறையில் மனுக்களை நேரில் பெறுகிறேன் என்றார். இன்றுமுதல் (ஜூலை 5) மனுக்களை அளித்துப் பயன்பெறலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in