Published : 04 Jul 2023 05:44 PM
Last Updated : 04 Jul 2023 05:44 PM
கர்நாடகா மீது அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு: "உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கர்நாடகம் தமிழகத்துக்கு சேர வேண்டிய தண்ணீரை ஜூன் மாதத்தில் வழங்கவில்லை. ஜூன் மாதத்தில், நமக்கு 9.19 டிஎம்சி தண்ணீர் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், வந்தது 2.833 டிஎம்சி தண்ணீர் மட்டும்தான். எனவே, குறைவு எவ்வளவு என்று பார்த்தால் 6.357 டிஎம்சி. காவிரி நதிநீர் பங்கீட்டு ஆணையம் கர்நாடகத்துக்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்" என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு: தனது கணவர் செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி அவரது மனைவி எஸ்.மேகலா, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுமீது நீதிபதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதனால் வழக்கு மூன்றாவது நீதிபதி யார் என்பதை தேர்வு செய்ய தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT