

உதகை: நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்பு படையின் 2 குழுக்கள் வருகை தந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் 6-ம் தேதி வரை கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்துக்கு அரக்கோணத்திலிருந்து 40 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் வருகை தந்துள்ளனர்.
இவர்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சா.ப.அம்ரித்தை சந்தித்து, மாவட்ட நிலவரம் குறித்து ஆலோசித்தினர். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.