Published : 04 Jul 2023 06:26 AM
Last Updated : 04 Jul 2023 06:26 AM
சென்னை: சென்னை சென்ட்ரல்-கேஎஸ்ஆர் பெங்களூரு இடையே இயக்கப்படும் சதாப்தி விரைவு ரயில் ஜோலார்பேட்டை சந்திப்பு நிலையத்தில் நின்றுசெல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வரும் 9-ம் தேதி தொடங்கிவைக்கிறார்.
சென்னை-பெங்களூரு இடையே வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் சதாப்தி விரைவு ரயில்,ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டுமென பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
ரயில்வே வாரியம் ஒப்புதல்: இதனடிப்படையில், சென்னை சென்ட்ரல்-கேஎஸ்ஆர் பெங்களூரு இடையே இயக்கப்படும் சதாப்தி விரைவு ரயில், ஜோலார்பேட்டை சந்திப்பு ரயில் நிலையத்தில் நின்றுசெல்ல ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
அமலாகும் தேதிகள்: அதன்படி, சதாப்தி விரைவு ரயில்(எண்: 12027), ஜோலார்பேட்டையில் இரவு 8.14 மணிக்கு நின்றுசெல்லும். இந்த வசதி வரும் 9-ம் தேதிமுதல் அமல்படுத்தப்படுகிறது.
மறுமார்க்கமாக, கேஎஸ்ஆர் பெங்களூரு-சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் சதாப்தி விரைவு ரயில் (எண். 12028), ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் காலை 7.49 மணிக்கு நின்று செல்லும். இந்த வசதி வரும் 10-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஜோலார்பேட்டையில் சதாப்தி விரைவு ரயில் நின்று செல்லும் வசதியை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வரும் 9-ம் தேதி தொடங்கிவைக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT