பல்லாவரம் சிறப்பு முகாமில் நரிக்குறவர் மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கல்

பல்லாவரம் சிறப்பு முகாமில் நரிக்குறவர் மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கல்
Updated on
1 min read

பல்லாவரம்: பல்லாவரம் நரிக்குறவர் காலனியில் கடந்த மாதம் 17-ம் தேதி முதல் கட்டமாக 100 நரிக்குறவர் இன பழங்குடி மக்களுக்கு எஸ்டி சாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து மீண்டும் 350 பேருக்கு நேற்று சாதிச் சான்றிதழ் வழங்கும் சிறப்பு முகாம் பல்லாவரம், நரிக்குறவர் காலனியில் நேற்று நடைபெற்றது. இம்முகாமுக்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர. ராகுல்நாத் தலைமை தாங்கினார். இதில், அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்து கொண்டு, 350 நரிக்குறவ பழங்குடி குடும்பங்களுக்கு சாதிச் சான்றிதழ்களை வழங்கினார்.

இதுவரை பல்லாவரத்தில் மொத்தம் 450 நரிக்குறவ இன மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இம்முகாமில், தாம்பரம் கோட்டாட்சியர் செல்வராஜ், பல்லாவரம் வட்டாட்சியர் ட்டி.ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர் ரம்யா, கிராம நிர்வாக அதிகாரி பூஜா, மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in