Published : 03 Jul 2023 06:49 AM
Last Updated : 03 Jul 2023 06:49 AM
சென்னை: பொறுப்பு மாவட்ட கல்வி அலுவலர் நியமனத்தில் விதிமீறல் நடந்துள்ளதாக மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் மாநிலச் செயலாளர் சா.ஞானசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் பலமாவட்டங்களில் ஜூன் 30-ம் தேதி மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணி ஓய்வு பெற்றுள்ளனர். இதனால், 5 மாவட்ட கல்வி அலுவலர் காலிப்பணியிடம் உருவானது.இந்த பணியிடத்தில் ஒரு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரையும், 4 உயர்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்களும் பொறுப்பு மாவட்ட கல்வி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியிடம் என்பது, உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, பதவி உயர்வுபணியிடமாக உள்ளது. அதனடிப்படையில் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மட்டுமே பொறுப்பு மாவட்ட கல்வி அலுவலர் பணியை வழங்க வேண்டும். அந்த வகையில், பொறுப்பு மாவட்ட கல்வி அலுவலர் நியமனத்தில் நடந்துள்ள விதிமீறலுக்கு தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழகம், பள்ளிக்கல்வி இயக்குநருக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது
எனவே, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளரும், பள்ளி கல்வி அமைச்சரும் பொறுப்பு மாவட்ட கல்வி அலுவலர் நியமனத்தில், சரியான வழிகாட்டு நெறிமுறையை உருவாக்கித் தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT