Published : 03 Jul 2023 07:09 AM
Last Updated : 03 Jul 2023 07:09 AM
சென்னை: நகர்ப்புறங்களில் உள்ள ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் ஓட்டுநர்களுக்கு ஓய்வுக்கூடம் அமைக்கும் வகையில் விதிகளில் திருத்தம் மேற்கொண்டு வீட்டுவசதித்துறை செயலர் அபூர்வா அரசாணை பிறப்பித்துள்ளார்.
தலைமைச் செயலராக இருந்துவெ.இறையன்பு, வீட்டு வசதித்துறை செயலருக்கு எழுதிய கடிதத்தில், ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் கார் ஓட்டுநர்கள் தங்குவதற்கான ஓய்வுக் கூடங்களை அமைக்க வேண்டும். அதற்காக,பெருநகரங்கள் மற்றும் சுற்றுலாப் பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளின் கட்டுமானத்துக்காக திட்ட அனுமதிகோரும்போது, இதுேபான்ற ஓட்டுநர்களுக்கான தங்கும் கூடத்தை அமைக்க வலியுறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
இதனடிப்படையில், வீட்டுவசதித்துறை செயலர் அபூர்வா, தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு சட்டம் மற்றும் தமிழ்நாடு உள்ளாட்சி சட்டம் ஆகியவற்றின் கீழ் வரும் தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளில் திருத்தம் மேற்கொண்டு அரசாணை பிறப்பித்துள்ளார். அந்த அரசாணையில்
"ஓட்டல்கள் மற்றும் தங்கும்விடுதிகளில், கார் ஓட்டுநர்களுக்காக ஒவ்வொரு கார் நிறுத்துமிடத்துக்கும் ஒரு படுக்கை வசதிகொண்ட ஓய்வுக்கூடத்தை ஏற்படுத்த வேண்டும். அதில் 8 படுக்கைகளுக்கு தலா ஒரு கழிவறை மற்றும் குளியலறை அமைக்கவேண்டும். இந்த ஓய்வுக்கூடம் ஓட்டலில் இருந்து 250 மீட்டர்தொலைவுக்குள் இருக்க வேண்டும்" என்று விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT