

சென்னை மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் போலீஸார், தீயணைப்புத் துறையினர், தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் என சுமார் 2 ஆயிரம் பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்டிட இடிபாடுகளில் இருந்து இதுவரை 49 பேர் சடலமாகவும், 27 பேர் உயிருடனும் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு டிஐஜி செல்வம் கூறுகையில், “இடிந்து விழுந்த கட்டிடத்தில் மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் 2 நாட்களில் இப்பணிகள் முடிவடையும்” என்றார்.