தவறான சிகிச்சையால் ஒரு கண்ணை இழந்தவருக்கு ரூ. 5.35 லட்சம் இழப்பீடு: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

தவறான சிகிச்சையால் ஒரு கண்ணை இழந்தவருக்கு ரூ. 5.35 லட்சம் இழப்பீடு: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

டாக்டர்களின் தவறான சிகிச்சை யினால் இடது கண்ணை இழந்த நோயாளிக்கு ரூ. 5.35 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை தெற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் எ.கே. பால கிருஷ்ணன் (62). இவர் சென்னை தெற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

என்னுடைய இடது கண்ணில் முதிர்ந்து இருந்த புரைக்கு சிகிச்சை பெற விருகம்பாக் கத்தில் உள்ள எஸ்.வெங்க டேஷ் என்ற கண் மருத்துவரின் கிளினிக்குக்குச் சென்றேன். கண்ணில் லென்ஸ் பொருத்தி னால் பார்வை சரியாகி விடும் என்று அவர் கூறினார். இதற்காக இன்ட்ரா அக்குலர் கேர் என்ற நிறுவனத்தில் இருந்து லென்ஸ் வாங்கப்பட்டது. பின்னர் சாலிகிராமத்தில் உள்ள பரணி மருத்துவமனையில் 6.2.2005 அன்று மருத்துவர் வெங்கடேஷ் எனக்கு அறுவைச் சிகிச்சை செய்து லென்ஸைப் பொருத்தி னார். இதில் தொற்றுநோய் இருந்ததால் பார்வை பாதிக்கப் பட்டதாக மேல் சிகிச்சைக்காக சங்கர நேத்ராலாயா மருத்துவ மனைக்கு சென்றபோது தெரி விக்கப்பட்டது. சிகிச்சை செய்தும் கண்ணில் எந்த முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் என்னுடைய இடது கண் அகற்றப்பட்டு செயற்கை கண் பொருத்தப்பட்டது.

பின்னர்க் கண் மருத்துவர் எஸ். வெங்கடேஷை சந்தித்த போது அவர் கண் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு அதே அரங்கில் வேறு ஒரு நோயாளிக்கு மூல வியாதி அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்பட்டது. அதனால் தான் லென்ஸில் தொற்று பரவி யது என்று சான்றிதழ் அளித்தார். எனக்குப் பொருத்தப்பட்ட லென்ஸுக்கும் நோய் நுண்மச் சான்றிதழ் பெறவில்லை.

என்னுடைய இடது கண்ணை இழக்க நேரிட்டதற்கும் மருத்து வச் செலவுகளுக்கும் இழப் பீடாக மேற்குறிப்பிட்ட மூன்று நிறுவனங்கள் ரூ. 17.52 லட்சம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கைத் தெற்கு நுகர் வோர் நீதிமன்றத்தின் தலைவர் பா. ஜெயபாலன், உறுப் பினர்கள் எல். தீனதயாளன், கே. அமலா ஆகியோர் விசாரித் தனர். கண் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பு மூல வியாதி அறுவை சிகிச்சை மேற் கொள்ளப்பட்டது உறுதி யாகி உள்ளது. மனுதாரர் இடது கண்ணை இழக்க நேரிட்ட முக்கிய காரணமான மருத்துவர் எஸ். வெங்கடேஷ் ரூ. 1,33,000த்தை அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட நாளில் இருந்து 7 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும்.

பரணி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவ மையம் சேவை குறைபாட்டிற்காக ரூ. 4 லட்சத்தை 7 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் மனுதாரரின் வழக்கு செலவுத் தொகையாக இரண்டு நிறுவனங்களும் தலா ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். ஆகமொத்தம் 5,35,000 வட்டியுடன் வழங்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in