தமிழகத்தில் 3 நாள் மழை வாய்ப்பு

தமிழகத்தில் 3 நாள் மழை வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சிநிலவுகிறது. மேலும், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் சில இடங்களிலும், வரும் 3, 4-ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை (ஜூலை 2) நீலகிரி, கோவை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.

ஜூன் 30-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் 6 செ.மீ., சத்யபாமா பல்கலைக்கழகம், புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, நீலகிரி மாவட்டம் பந்தலூர் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in