

சென்னை: ரூ.300 கோடியில் பிராட்வே பேருந்து நிலையத்தை மேம்படுத்தவும், அம்மா குடிநீர் ஆலைகளை சென்னை குடிநீர் வாரியத்திடம் வழங்கவும் சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சி மான்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில்நடைபெற்றது. இதில் 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றில் முக்கிய தீர்மானங்களின் விவரம்:
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கான ஊக்கத்தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்வு.