வாரம் ஒருமுறை மக்களை சந்தித்து குறைகளை கேட்க வேண்டும் - காவல் அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு

வாரம் ஒருமுறை மக்களை சந்தித்து குறைகளை கேட்க வேண்டும் - காவல் அதிகாரிகளுக்கு அரசு உத்தரவு
Updated on
1 min read

சென்னை: மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் பொதுமக்க ளைச் சந்தித்து குறைகளை கேட்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு திங்கள்கிழமையும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குறைதீர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த முகாம்களில் வருவாய் துறை தொடர்பாக மக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் பெறப்பட்டு, அவற்றுக்கு தீர்வு காணப்படுகின்றன.

மனு மீது நடவடிக்கை: இதுதவிர, மாநகர காவல் ஆணையரகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் இதுபோன்று பொதுமக்களின் புகார்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இந்நிலையில், மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் பொதுமக்களைச் சந்தித்து புகார்களைப் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, டிஜிபி சைலேந்திரபாபுவின் முயற்சியால், வாரம்தோறும் புதன்கிழமையன்று பொதுமக்கள் குறைதீர்வு நிகழ்வுகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் காவல் உயர் அதிகாரிகளை பொதுமக்கள் நேரில் சந்தித்து புகார் கொடுத்து, வழக்கு விவரங்களையும் தெரிவிக்க முடியும். காவல் துறை மீதான நம்பிக்கையும் அதிகரிக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in