மாரத்தான் ஓட்டத்தை முன்னிட்டு மெரினா - பெசன்ட் நகரில் நாளை காலை போக்குவரத்து மாற்றம்
சென்னை: லைட் ஹவுஸ் மற்றும் லைட்ஷிப்களின் இயக்குநரகம் (துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம், இந்திய அரசு) சார்பில் மாரத்தான் ஓட்டம் (7 கி.மீ.) நாளை காலை சென்னையில் நடைபெற உள்ளது.
இதற்காக பெசன்ட் நகர் ஒல்காட்நினைவு பள்ளியில் தொடங்கி, சாஸ்திரி நகர் மற்றும் கலங்கரைவிளக்கம் வரை (சனிக்கிழமை) காலை 4 மணி முதல் 7 மணி வரைபோக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை போக்குவரத்து போலீஸார் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: பெசன்ட் நகர் 2-வது அவென்யூ, 3-வது அவென்யூ மற்றும் எம்.எல்.பூங்கா நோக்கி வரும் அனைத்து வாகனங்கள் சாஸ்திரி நகர், பெசன்ட் நகர் டிப்போ அருகே திருப்பிவிடப்படும்.7வது அவென்யூ சந்திப்பு - வலது எம்ஜி சாலை - எல்பி சாலை சந்திப்பு வழியாக தங்கள் இலக்கை அடையாளம்.
அடையார் சிக்னல், எம்.எல்.பூங்கா வரும் அனைத்து பேருந்துகளும் ( எம்டிசி பேருந்துகள் உட்பட ) எம்.எல்.பூங்காவில் திருப்பிவிடப்படும். இடது எல்பி சாலை - சாஸ்திரி நகர் 1-வது அவென்யூவில் திருப்பிவிடப்படும். திரு.வி.க பாலத்தில் இருந்து டாக்டர் டி.ஜி.எஸ் தினகரன் சாலை, சாந்தோம் ஹை ரோடு, காமராஜர் சாலை, லைட் ஹவுஸ் வரை வரும் திசையில் போக்குவரத்தில் மாற்றம் ஏதும் இல்லை.
காந்தி சிலையிலிருந்து கலங்கரை விளக்கம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படாது. ஆர்.கே.சாலையிலிருந்து செல்லும் வாகனங்கள் காந்தி
சிலையை நோக்கி அனுமதிக்கப்படாது. வி.எம்.தெரு வழியாக ராயப்பேட்டை ஹை ரோடு, லஸ் கார்னர், ஆர்.கே.மடம் சாலை வழியாக இலக்கை அடையலாம். மந்தைவெளி சந்திப்பில் இருந்து தெற்கு கால்வாய் கரை சாலைக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படாது. அவர்கள் வி.கே.ஐயர் சாலை, ஆர்.ஏ.புரம் 2-வது பிரதான சாலை, சேமியர்ஸ் சாலை, காந்தி மண்டபம் வழியாக திருப்பி விடப்படும்.
