சென்னை - கொல்லம் விரைவு ரயில் சிவகாசியில் நின்று செல்லும்: பயணிகள் வரவேற்பு

சென்னை - கொல்லம் விரைவு ரயில் சிவகாசியில் நின்று செல்லும்: பயணிகள் வரவேற்பு
Updated on
1 min read

சிவகாசி: சென்னை - கொல்லம் விரைவு ரயில் சோதனை அடிப்படையில் சிவகாசியில் நின்று செல்லும் என்ற அறிவிப்புக்கு பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

சென்னை எழும்பூரில் இருந்த சிவகாசி, ராஜபாளையம், தென்காசி வழியாக கொல்லம் வரை இயக்கப்படும் விரைவு ரயில், கரோனா ஊரடங்கு காலத்துக்குப் பின்பு சிவகாசியில் நின்று செல்வதில்லை. அதேநேரம், மறு மார்க்கத்தில் கொல்லத்திலிருந்து சென்னை செல்லும்போது சிவகாசியில் ரயில் நின்று சென்றது.

இது குறித்து பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் சங்கம் சார்பில் ரயில்வே அதிகாரிகளிடம் முறையிடப்பட்டது. இதற்காக பொது மக்கள், வர்த்தகர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய போராட்டக் குழுவும் அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 21-ம் தேதி சென்னை - கொல்லம் ரயில் சிவகாசியில் நின்று செல்ல வலியுறுத்தி, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், எம்எல்ஏ அசோகன் உட்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் சென்னை - கொல்லம் ரயில், சோதனை அடிப்படையில் தற்காலிகமாக சிவகாசி ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. சிவகாசி ரயில் நிலையத்தில் இறங்கும் பயணிகளின் எண்ணிக்கையை கண்காணித்து இந்த நடைமுறையை நிரந்தரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை - கொல்லம் ரயில் சிவகாசியில் நின்று செல்லும் என்று ரயில்வே அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பை பயணிகள் வரவேற்றுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in