

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கியது.
அவை கூடியவுடன், சென்னை போரூர் அடுத்த மவுலிவாக்கத்தில் 11 மாடி கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானதில் பலியான 61 பேருக்கும், திருவள்ளூர் அலமாதியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலியான 11 பேருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும், மறைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அவை நடவடிக்கைகள் 30 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டன.
இன்று வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் செய்தித்துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கிறது.