

ஜெயங்கொண்டம் தொகுதி பாமக எம்எல்ஏ காடுவெட்டி குரு. வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இவர்மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
இதை எதிர்த்து மத்திய அரசிடம் குரு சார்பாக முறையிடப்பட்டது. மத்திய அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்தது. எனினும் அடுத்தடுத்து குரு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து டிசம்பரில் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இம்மனு தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எஃப்.நரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு மூன்று முறை ரத்து செய்த நிலையிலும் மீண்டும் குரு மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி மனுவை தள்ளுபடி செய்தனர்.