

திமுகவுடன் கசப்பும் இல்லை, வெறுப்பும் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
ஈரோட்டில் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஞாயிற்றுக் கிழமை கோவை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு கல்விக்கு 3 சதவீத நிதி ஒதுக்கி வருகிறது. இந்த நிதி மிகவும் குறைவு. கல்விக்கு 25 சதவீத நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
கல்வியை வியாபாரமாக்கக் கூடாது, தனியார் மயமாக்கக் கூடாது என வலியுறுத்தி எங்களது கட்சி சார்பில் தேசிய கல்வி உரிமை கலந் தாய்வுக் கூட்டம் ஆகஸ்ட் 17 ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது.
`வேர்களைத் தேடி’ என்ற பெயரில் கட்சி உறுப்பினர்களையும், பொதுமக்களையும் ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் நேரடியாக சந்திக்க உள்ளோம். இதன் மூலம் கட்சியை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
திமுகவுடன் வெறுப்பு இல்லை
கடந்த காலங்களில் காங்கிரஸ் செய்த தவறுகளை பாஜக அரசு செய்து வருகிறது. சமஸ்கிருத வார விழா கொண்டாடுவதை முதல்வர் ஜெயலலிதா எதிர்த்துள் ளதை வரவேற்கிறோம். சமஸ்கிருத வார விழா கொண்டாடுவதற் குப் பதிலாக தமிழ் செம்மொழி வார விழா கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.