Last Updated : 29 Jun, 2023 04:01 PM

1  

Published : 29 Jun 2023 04:01 PM
Last Updated : 29 Jun 2023 04:01 PM

“அண்ணாமலையின் நடைபயணத்தால் தமிழகத்தில் பாஜக வளர்ச்சியடையும்” - மத்திய இணை அமைச்சர்

மத்திய இணை அமைச்சர் நாராயண சுவாமி

மதுரை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ளும்போது, பாஜக மேலும் வளர்ச்சியடையும் என்று மத்திய இணை அமைச்சர் நாராயண சுவாமி கூறியுள்ளார்.

மதுரை மாநகர் மாவட்ட பாஜக வடக்கு தொகுதி அணி பிரிவு நிர்வாகிகள் மாநாடு மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய சமூக நலத்துறை இணை அமைச்சர் நாராயண சுவாமி பேசியவது: "மத்திய அரசின் நலத் திட்டங்களை வீடு வீடாக கொண்டு சேர்க்கின்ற பணியில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடியின் கடுமையான உழைப்பால் இந்தியா உலக அளவில் பொருளாதாரத்தில் முன்னேறியுள்ளது.

உலகத் தலைவர்கள் பலருடன் இந்தியாவின் வளர்ச்சி குறித்து பிரதமர் மோடி பேசி வருகிறார். பாஜகவுக்கு இளைஞர்கள் ஆதரவு பெருகி உள்ளது. தமிழகத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை நடைபயணம் தொடங்கும்போது பாஜகவின் பலம் மேலும் அதிகரிக்கும். பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராவார்" என்று அவர் பேசினார்.

மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, மாவட்ட துணைத் தலைவர் ஜெயவேல், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜ்குமார், இளைஞர் அணி தலைவர் பாரி ராஜா, மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர் பாஸ்கரன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் குமார், பாலகிருஷ்ணன், மகளிர் அணி தலைவி மீனா இசக்கிமுத்து, இளைஞர் அணி நிர்வாகிகள் அருண் பாண்டியன், முகேஷ் குமார், ஊடகப் பிரிவு தலைவர் ரவிச் சந்திர பாண்டியன் மாவட்ட துணைத் தலைவர் ஜோதி மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x