முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி ஜூலை 1-ல் தொடக்கம்

முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி ஜூலை 1-ல் தொடக்கம்
Updated on
1 min read

சென்னை: முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி சென்னையில் ஜுலை 1-ம் தேதி முதல் ஜுலை 25-ம் தேதி வரை நடைபெறுகிறது.

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், முதல்வர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி சென்னையில் 17இடங்களில் ஜுலை 1-ம் தேதி முதல் ஜுலை 25-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதன் தொடக்க விழா நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் வரும் 30-ம் தேதி நடைபெறுகிறது. விழாவுக்கு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தலைமை வகிக்கிறார்.

இப்போட்டிகளில் 27,000-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கஉள்ளனர். பயிற்றுநர்கள், நடுவர்கள், அலுவலர்கள் மற்றும் தேசிய மாணவர் படை தன்னார்வலர்கள் அனைவருக்கும் போட்டி நடைபெறுகின்ற அனைத்து நாட்களிலும் தங்குவதற்கு வசதியாக சென்னையில் 2,000-க்கும் மேற்பட்ட அறைகள் மற்றும் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழக உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவ மாணவியர் விடுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், போட்டி நடைபெறும் அனைத்து நாட்களிலும் உணவு மற்றும்சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in