4-வது டாக்டர் கே.சி.ஜி.வர்கீஸ் சிறப்பு விருது 2023: இந்துஸ்தான் குழுமம் சார்பில் 32 பேருக்கு விருது

இந்துஸ்தான் குழுமம் சார்பில் நடைபெற்ற 4-வது டாக்டர் கே.சி.ஜி.வர்கீஸ் சிறப்பு விருது 2023 வழங்கும் விழாவில் ‘இந்து’ என்.ராம், இந்துஸ்தான் கல்விக் குழும தலைவர் ஆனந்த் ஜேக்கப் வர்கீஸ் ஆகியோர் விருதுகளை வழங்கினர்.
இந்துஸ்தான் குழுமம் சார்பில் நடைபெற்ற 4-வது டாக்டர் கே.சி.ஜி.வர்கீஸ் சிறப்பு விருது 2023 வழங்கும் விழாவில் ‘இந்து’ என்.ராம், இந்துஸ்தான் கல்விக் குழும தலைவர் ஆனந்த் ஜேக்கப் வர்கீஸ் ஆகியோர் விருதுகளை வழங்கினர்.
Updated on
1 min read

சென்னை: கல்வித் துறையில் சிறந்து விளங்கும் இந்துஸ்தான் குழும நிறுவனங்கள் சார்பில், நிறுவனர் தலைவர் மறைந்த கே.சி.ஜி.வர்கீஸ் நினைவைப் போற்றும் வகையில், 4-வது டாக்டர் கே.சி.ஜி.வர்கீஸ் சிறப்பு விருது 2023 வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் 32 பிரபலங்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

விழாவுக்கு இந்துஸ்தான் கல்விக் குழுமத்தின் தலைவர் ஆனந்த் ஜேக்கப் வர்கீஸ், நிறுவனர் தலைவர் எலிசபெத் வர்கீஸ், துணைத் தலைவர்கள் அசோக் வர்கீஸ், சூசன் வர்கீஸ், கேசிஜி தொழில்நுட்ப கல்லூரி இயக்குநர் ஆனி ஜேக்கப், செயல் இயக்குநர் அபி சாம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விருது வழங்கும் விழாவில் ‘இந்து’ என்.ராம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விருதுக்கான கைப்பிரதியை வெளியிட்டு பேசும்போது, மாணவர்களை தயார்படுத்துவதிலும், சாதனையாளர்களை ஊக்குவிப்பதிலும் இந்துஸ்தான் குழுமத்தின் முயற்சிகளைப் பாராட்டினார். “இந்தியாவில் கல்வி, நீதி, பேச்சுரிமை ஆகியவை சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் கிடைக்கச் செய்திருந்தாலும், மேலும் சிறப்படைய இன்னும் அதிகமாகச் செயல்பட வேண்டும்” என்றார்.

ஐநா முன்னாள் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி, ஜெர்மனி தலைமை தூதர் மைக்கேலா குச்லர் ஆகியோரும் சிறப்புரையாற்றினர். ‘இந்து’ என்.ராம், இந்துஸ்தான் கல்விக் குழுமத் தலைவர் ஆனந்த் ஜேக்கப் வர்கீஸ் ஆகியோர் விருதுகளை வழங்கினர். மூத்த வழக்கறிஞர் கே.துரைசாமி, சுரானா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in