Published : 15 Jul 2014 11:30 AM
Last Updated : 15 Jul 2014 11:30 AM

விலைவாசி உயர்வுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்: முதல்வர் மீது ஜி.ராமகிருஷ்ணன் தாக்கு

பட்ஜெட்டை வரவேற்பதன் மூலம் பாஜக-விடம் முதல்வர் ஜெய லலிதா ஏதோ பிரதிபலனை எதிர் பார்க்கிறார் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக இந்திய, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்கள்கிழமை மதுரையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மதுரை மாவட்டச் செயலர் பா.விக்ரமன் தலைமை வகித்தார். இந்திய கம்யூ னிஸ்ட் மாநகர் மாவட்டச் செயலர் ஆர்.ஜெயராமன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:

பாஜக தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின்போது விலைவாசி குறைப்பு குறித்து பேசினர். ஆனால், சில நாட்களுக்கு முன் டீசல் விலை உயர்த்தப்பட்டது. மேலும், தற்போது வெளியிடப்பட்ட பொது பட்ஜெட்டில் ராணுவத்தில் அந்நிய முதலீடு 49 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி வருமானம் ஈட்டக் கூடிய காப்பீட்டுத் துறை போன்ற பொதுத்துறை நிறுவனங் களில் தனியார் முதலீடு புகுத்தப் படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனால் பொதுத்துறை நிறுவனங்கள் திவாலாகும் நிலை ஏற்படும். நாட்டில் பெரும் பான்மையாக உள்ள ஏழை மக்கள் கடுமையாகப் பாதிக்கப் படுவார்கள். காங்கிரஸின் அதே கொள்கையைத்தான் பாஜக-வும் பின்பற்றுகிறது. டீசல் விலை உயர்வு குறித்து கடிதம் அனுப்பிய ஜெயலலிதா பட்ஜெட்டை வரவேற்றுள்ளார். இதன் மூலம் பாஜக-விடம் ஏதோ ஒன்றை அவர் எதிர்பார்ப்பதாக தெரி கிறது. அதுபோல, திமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் கூட பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரி விக்கவில்லை. விலை உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும் என்பது நமது கோரிக்கை.

சென்னையில் 11 மாடி கட்டிடம் இடிந்த விபத்தில் பலர் உயிரிழந்தனர். எனவே, முறையான அனுமதி பெற்று சட்டத்துக்கு உட்பட்டு கட்டிடம் கட்டப்பட்டதா என்பதை ஆராய மத்திய புல னாய்வு குழு விசாரணைக்கு உத்தர விட வேண்டும்’’ என்று ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தின் நடுவே அரசுக்கு எதிராக பதாகையை ஏந்திய ஒருவர் பரதேசி தோற்றத் துடன் வந்தார். அப்போது அங்கி ருந்தவர்கள் அவரை துரத்தினர். சற்றுநேரம் கழித்துதான் அவர் கட்சியைச் சேர்ந்த ஜெய்ஹிந்த்புரம் பகுதி பாலகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.

மோடியின் பட்ஜெட் இப்படியே போனால் இதே கதி தான் என்ற வாசகத்துடன் வந்தார். இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.பி. லிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூ. முன்னாள் எம்.எல்.ஏ. என்.நன்மாறன் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x